×

அக்ரஹாரம் ஏரி நிரம்பி கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர் கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை மோர்தானா அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால்

குடியாத்தம், ஏப்.30: மோர்தானா அணையிலிருந்த நீர் திறக்கப்பட்டதால் அக்ரஹாரம் ஏரி நிரம்பி கோடி போனதால் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. எனவே, கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையில் இருந்து கடந்த 10ம் தேதி நீர் திறந்த விடப்பட்டது. இவை அக்ரஹாரம், பெரும்பாடி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி சில தினங்களுக்கு முன்பு கோடி போனது. இந்நிலையில் அக்ரஹாரம் ஏரி நிரம்பி விவசாய நிலங்கள் வழியாக சென்று குடியிருப்பு, சாலைகள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்தது. சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீருடன் கால்வாய் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. எனவே அக்ரஹாரம் ஏரி கோடி கால்வாய்களை தூர்வார வேண்டும் எனவும், கால்வாய் கட்டிடத்தை, அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையம் வரை சுமார் 150 மீட்டர் தொலைவிற்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post அக்ரஹாரம் ஏரி நிரம்பி கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர் கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை மோர்தானா அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் appeared first on Dinakaran.

Tags : Mordhana Dam ,Agraharam Lake ,Kudiatham ,Dinakaran ,
× RELATED சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை...